2020 பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று (6) முதல் பொறுப்பேற்கப்படுகின்றன. இந்த பணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமக்கு உரிய மாவட்டத்தின் தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரியிடம் தபால் வாக்கிற்கான விண்ணப்பப்படிவத்தை கையளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
(GID)

