குமார வெல்கமவின் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்சிக்கு நவ லங்கா நிதஹஸ் பக்ஷய ( புதிய லங்கா சுதந்திர கட்சி) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு அக்கட்சியின் தலைவர் குமார வெல்கமவின் தலைமையில் இன்று புறக்கோட்டையில் இடம்பெற்றது.

தூய்மையான பண்டாரநாயக்க கொள்கைக்கான நவ லங்கா நிதஹஸ் பக்ஷய என்ற தலைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கட்சியின் கொள்கை பிரகடனம் அதன் செயலாளர் திலக் வராகொடவினால் கட்சித் தலைவர் குமார வெல்கமவிற்கு கையளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த புதிய சிங்ஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குமார வெல்கமவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

இதனூடாக அதிகளவான உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், குமார வெல்கமாவை உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)