அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்ற 9 ஆம் திகதி வரை சந்தர்ப்பம்

Rihmy Hakeem
By -
0



   அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம், தற்போது சகல  கட்சிகளுக்கும்  வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (09) வரை இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

   கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களைக் கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)