கொரோனா வைரஸ் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவிப்பு

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
முன்னர் நாளொன்றிற்கு 40 பேர் பாதிக்கப்படைந்த நிலையில், தற்சமயம் 19 ஆக குறைவடைந்திருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது.
ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக சீனாவிற்கு வெளியே இத்தாலியில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)