எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ரணில் - சஜித் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இன்று காலையில் கொழும்பிலுள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரணில் அணி சார்பாக முன்னாள் எம்பிகளான ஆசு மாரசிங்க, சமன் ரத்னபிரிய உள்ளிட்ட குழுவினரும் சஜித் அணி சார்பாக முன்னாள் எம்பி சுஜீவ சேனாசிங்க உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்ததுடன், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மத்தியஸ்தம் வகித்தார்.
எனினும் மேற்படி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.