கொரோனா வைரஸால் எமிரேட்சில் இரு இலங்கையர்களுக்கு பாதிப்பு

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏற்கனவே அங்கு கொரோனா தொற்றுக்கு உள்ளான 74 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 17 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Gulf News செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இத்தாலியர்கள் மூவரும் இலங்கை, எமிரேட்ஸ், பிரிட்டிஷ், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவரும் ஜேர்மன், தன்சானியா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிலிருந்து தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)