நேற்று வரை... தன் அன்றாட வாழ்வியல், மனைவி - பிள்ளைகள் என்று வாழ்ந்து வந்த ஒரு இளைஞன் இன்று நம்மோடில்லை. எல்லோரும் போல வழக்கமான கனவுகளோடு தினசரி வாழ்க்கையை ஆரம்பித்த அவரின் இரவு கொலையில் முடியுமென்று அவர் எதிர்பார்த்திருந்திருக்கப் போவதில்லை. மரணித்த, கெக்கிராவ, கனேவல்பொல அப்துல் அசீஸ் அப்துல் கபூர் (33), அன்பர் அஜாஸின் மைத்துனர் என்பதையறிந்த போது இன்னும் கவலை. இறந்தவரின் நற்காரியங்களைப் பொருந்திக் கொள்ளும் இறைவன் அவர் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளிக்க பிரார்த்தனைகள்.
தூண்டினால்.. எதிர்வினையாற்றுவதும் தன் கண் முன்னே இடம்பெறும் வன்முறையை ஏதோ ஒரு அளவில் எதிர்க்கவோ.. தடுக்கவோ செல்வதும் சாதாரண மனித இயல்பு. ஆனாலும், இலங்கையின் சூழ்நிலையில் நாம் தொடர்ச்சியாகக் கண்டு வரும் துன்பியல்களுக்கென இருக்கும் பொதுத் தன்மையை உணர்வதும் அதற்கேற்ப எதிர்வினையாற்றுவதும் அவசியப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் திடீர் அபாயங்களின் போது பாதுகாப்பு துறையைத் தொடர்பு கொள்ள வர்த்தக நிலையங்களில் 'PANIC' பட்டன் பொருத்தப்படும் வழக்கம் உள்ளது. சமநீதி செத்துப் போன இலங்கையில் சூழ்நிலை அரசியலுக்கே காவற்துறையும் எதிர்வினையாற்றுவதால் ஒவ்வொரு சம்பவத்திலும் அரசியல் பங்களித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா தெரியவில்லை.
இலங்கையில் ஒரு வர்த்தக நிலையத்தில் மது அருந்த முனைவதும் அதனால் சண்டை சச்சரவுகள் உருவாவதும் இது முதற்தடவையுமில்லை முடிவுமில்லை. ஆனாலும், போயா தினத்தில் ஒரு முஸ்லிம் ஹோட்டலில் தான் குடிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆக்கிரமிப்பு அரசியலின் ஒரு வடிவம். அளுத்கமையில், கிந்தொட்டயில், திகனயில் தனி நபர்களின் சர்ச்சைகள் ஒரு சமூகத்துக்கு எதிரான வன்முறையாக உருவாவதை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் மாறி நடந்தால் என்னவாகும்? என்ற கேள்வியும் கேட்டுப் பிரயோசனமில்லை.
ஆதலால், இன்னுயிர்களை அநியாயக்காரர்களிடம் பலி கொடுக்காது, அதற்கேற்ற தற்பாதுகாப்பு நடவடிக்கைளை திட்டமிடல் அவசியப்படுகிறது. எல்லாவற்றிற்கும் எதிர்க் கேள்வி உண்டென்பதால் எதைச் சொன்னாலும் அதற்கொரு கேள்வியிருக்கும். ஆகக்குறைந்தது, உடைமைகளை மீளப் பெறலாம், சம்பாதிக்கலாம். உயிர்களை இழக்க வேண்டாமே என்ற சிந்தனையோடு இவ்வாறான அக்கிரமங்களை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கையான திட்டங்கள் தேவைப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்களின் போது தம் முன் நகர்வின் 'வரையறை' அல்லது எல்லையெது என்பதை ஒவ்வொரு வர்த்தக நிலையமும் தமது பிராந்திய சூழ்நிலைக்கேற்ப வடிவமைத்துக் கொள்வது கட்டாயமாகிறது.
انا لله وانا اليه راجعون
(இர்பான் இக்பால்)