ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பகிடிவதை - மாணவர்கள் பொலிஸ் விசாரணையில்..

Rihmy Hakeem
By -
0

ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர் மீது தலையில் ரயரை அணிவித்த சம்பவம் தொடர்பில் இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 5 மாணவர்களிடம் மிரிஹான பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்;ட விசேட விசாரணையின் போது இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்காக கைது செய்யப்பட்;ட இவர்கள் மத்தியில் முதலாம் வருட மாணவர் மீது இந்த பகிடிவதை சம்பவத்தை மேற்கொண்ட சிரேஷ்ட மாணவர் ஒருவர் இருப்பதாகவும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி இரவு ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழக வளவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றை அடுத்து எதிர்கொள்ளப்பட்ட சம்பவத்தினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவரான பசிந்து ஹிருஷாந்த் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)