கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே, இதற்கான உத்தரவை இன்று (17) பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டியை சேர்ந்த அமில துஷ்மந்த என்பவருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனவால் இருவர் உயிரிழந்துள்ளதாக போலியான தகவலை பேஸ்புக்கில் வெளியிட்டு குறித்த நபர் குற்றமிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(தமிழ் மிரர்)