கொவிட் - 19 தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைவாக தபால் மூல வாக்கிற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதித் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2020 பாராளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இன்று (17) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் எதிர்வரும் தினங்களில் கிடைக்கப்பெறும் தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் இன்றைய தினத்தில் கிடைத்த விண்ணப்பங்களாக கருத்தில் கொண்டு செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்

