ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பௌத்த சமயத்தினை இந்த நாட்டில் அமுல்படுத்துவராகவிருந்தால் அதில் சந்தோசப்படுவது முஸ்லிம்கள்தான் - ஹனீபா மதனி தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பௌத்த சமயத்தினை இந்த நாட்டில் அமுல்படுத்துவராகவிருந்தால் அதில் சந்தோசப்படுவது முஸ்லிம்கள்தான், ஏனென்றால் பௌத்த சமயத்தில் மது அருந்தக்கூடாது என்று சொல்லப்படுகின்றது, விபச்சாரத்தினை முற்றாக வெறுக்கிறது ஊழல் மோசடியை கண்டிக்கின்றது, மனிதர்களுடன் இரக்கமாக நடந்துகொள்ளுமாறு கூறுகின்றது இவ்வாறு இஸ்லாத்தில் சொல்லப்பட்ட என்பது வீதமான நல்ல விடயங்கள் காணப்படுகின்றது. அதனால் பௌத்த சமயத்தினை அமுல்படுத்தினால் சந்தோசப்படுவோம். ஆனால் ஆட்சியாளர்களின் நோக்கம் பௌத்த சமயத்தை அமுல்நடத்துவதல்ல மாறாக இஸ்லாத்திற்கு எதிராக பௌத்தத்தினை பாவிக்க வேண்டும் என்கிற நோக்கமே மேலோங்கியுள்ளதாக உணரமுடிகின்றது என்றார் ஹனீபா மதனி
சமகால அரசியல் ஆய்வும், நாடாளுமன்ற வேட்பாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும், ஓய்வு நிலை பொது முகாமையாளருமான எஸ்.செய்யித் அஹமத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அண்மையில் பட்டியடிப்பிட்டி பாலத்தடி மரச்சோலையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக களம் இறங்கவுள்ள அஷ்ஷேஹ் ஹனீபா மதனி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு, கிழக்கிலே வாழ்ந்த சிறுபான்மை இன மக்கள் அதிகளவானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். அதேபோல் சிங்கள பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் வாக்குகள் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு கிடைக்கப்பெற்றது. ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ததன் பின்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. கூட்டப்பட்ட அந்நாடாளுமன்றத்தில் அத்துரலிய ரத்ன தேரர் தனிநபர் பிரேரணையொன்றினை முன்வைத்தார். அப்பிரேரணையில் இலங்கையில் ஒரு பொதுச்சட்டம் காணப்படுதல் வேண்டும், அச்சட்டமானது சிங்களவர்களினால் உருவாக்கப்படுதல் வேண்டும். முஸ்லிம்களுக்கென்று விவாக, விவாகரத்து மற்றும் இத்தா போன்ற சட்டங்களோ அல்லது காதி நீதிமன்றங்களோ இருக்கக்கூடாது என்றே அந்த தனிநபர் பிரேரணை இருந்தது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்திரணியுமான விஜயதாச ராஜபக்ஷவினால் இன்னுமொரு தனிநபர் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணையில் குர்ஆன் மத்ரசாக்கள், அறபுக்கல்லூரிகள் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் என இஸ்லாத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளவைகள் மூடப்படுதல் வேண்டும் என்பதுடன், முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஆடை(புர்கா, நிகாப்) களுக்கு தடை விதிக்கப்படுதல் வேண்டும், இன்று இந்தநாட்டில் அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறையினால் பலமான, பெரும்பான்மையின அரசாங்கத்தினை நிறுவமுடியாதுள்ளது. அந்த அரசாங்கத்தில் சிறுபான்மையினரின் கைகள் சில நேரம் ஓங்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. நினைத்தவாக்கில் சட்டங்களை இயற்றமுடியாதுள்ளது. எனவே தேர்தல் சட்டங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த இரண்டு பிரேரணைகளும் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணைகளாக வருகின்றபோது விவாதிக்கப்பட்டு , வாக்கெடுப்புக்கு விடப்படுதல் வேண்டும் இது நாடாளுமன்ற சம்பிரதாயம். ஆனால் அதற்கு முன்னரே நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆந் திகதி கலைக்கப்பட்டுவிட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கடந்த 12அந் திகதி ஒரு ஊடகவியலாளர் மாநாடொன்றின் மூலமாக பகிரங்கமாக ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அது என்னவென்றால் நாங்கள் உங்களை ஜனாதிபதியாக தேர்வு செய்தது இந்த மத்ரசாக்களை, புர்காக்களை இல்லாமலாக்கவே. ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பு நீங்கள் அதனை செய்யாது விட்டால் நாங்கள் உங்களுக்கு எதிராக இந்த தேர்தலில் கடும்தொனியுடன் நடந்துகொள்வோம்; என மிகப்பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முஸ்லிம்களை முன்னிலைப்படுத்துவதில் பின்நிற்கின்றது. இந்த விடயம் எங்களுக்கு ஒரு செய்தியை சொல்லுகின்றது. இவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றார்கள் என்கிற கேள்வி எழுகின்றது. அதற்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்றால் பெரும்பான்மை சிங்கள மக்களால் உருவாகின்ற தூய அரசாங்கத்தினால் மட்டுமே நாங்கள் விரும்பியவற்றை நாடாளுமன்றின் ஊடாக செய்யமுடியும். இன்னுமொருவர் பங்காளிகளாக இருக்கின்ற போது அந்த விடயங்களை செய்யமுடியாது அதனை செய்வதற்கு நிறைய முட்டுக்கட்டைகள் வரும் என்கின்றனர் இதுதான் சமகால அரசியலின் உண்மைத்தன்மை.
மட்டக்களப்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டது. அதனை பலரும் வரவேற்கின்றனர். மாணவர்கள் பல்கலைக்கழம் செல்வது போட்டித்தன்மை மிக்கதாகவுள்ளது. ஆனால் மூவின மாணவர்களும் இந்த பல்கலைக்கழகம் ஊடாக தங்களது கல்வி நடவடிக்கையினை தொடரவே பற்றிகலோ கெம்பஸ் நிர்மாணிக்கப்பட்டது. இனவாதிகள் இதனை சுவீகரிக்கவேண்டும் என அப்போதிருந்தே கங்கனம் கட்டிக்கொண்டிருந்தனர். இப்போது கொரோனா வந்ததன் பிற்பாடு ஹிஸ்புல்லாவின் அனுமதியில்லாமல் பூட்டுக்களுக்கு வேட்டுக்களை வைத்து இராணுவம் கையகப்படுத்தி வெளிநாடுகளில் இருந்துவரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றியிருக்கின்றனர். பெரும்பான்மையினரின் மனோபாவம் எப்படி இருக்கின்றது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம். இப்படியான விடயங்கள் ஏலவே பர்மா போன்ற நடாடுகளில் அரங்கேரியது, பிற்பாடு இப்போது இந்தியாவில் துளிர்விடத் தொடங்கியுள்ளது. பெரும்பான்மையாக இருக்கின்ற இந்துக்கள், பௌத்தர்கள் சிறுபான்மையாவுள்ள முஸ்லிம்களை சன்னம் சன்னமாக மனோ ரீதியாக பாதிப்படையச் செய்வதான விடயங்களாகும்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பௌத்த சமயத்தினை இந்த நாட்டில் அமுல்படுத்துவராகவிருந்தால் அதில் சந்தோசப்படுவது முஸ்லிம்கள்தான், ஏனென்றால் பௌத்த சமயத்தில் மது அருந்தக்கூடாது என்று சொல்லப்படுகின்றது, விபச்சாரத்தினை முற்றாக வெறுக்கிறது ஊழல் மோசடியை கண்டிக்கின்றது, மனிதர்களுடன் இரக்கமாக நடந்துகொள்ளுமாறு கூறுகின்றது இவ்வாறு இஸ்லாத்தில் சொல்லப்பட்ட எண்பது வீதமான நல்ல விடயங்கள் காணப்படுகின்றது. அதனால் பௌத்த சமயத்தினை அமுல்படுத்தினால் சந்தோசப்படுவோம். ஆனால் ஆட்சியாளர்களின் நோக்கம் பௌத்த சமயத்தை அமுல்நடத்துவதல்ல மாறாக இஸ்லாத்திற்கு எதிராக பௌத்தத்தினை பாவிக்க வேண்டும் என்கிற நோக்கமே மேலோங்கியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
குறித்த நிகழ்வில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளராகவுள்ள முன்னாள் நீதிபதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.கபூர் , அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், தொழிலதிபருமான பாசித் அக்கரைப்பற்று பிரதேச சபையின் அ.இ.ம.கா.கட்சியின் உறுப்பினர், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தலைவர் ஹக்கீம் பிசி மற்றும் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Rishardh A Cader