(அப்ரா அன்ஸார்)
கோவிட் 19 வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் காரணமாக தர்கா நகர் சந்தையில் உள்ள வியாபார நிலையங்கள் நேற்று மற்றும் இன்று(21,22)மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
வழமை நாட்களில் விறுவிறுப்பாக இருக்கும் இச்சந்தை இந்நிலையில் வெறிச்சோடிப்போயுள்ளதை காணமுடிகின்றது.
பாதுகாப்பு பிரிவினர் வீதிகளில் கடமையில் ஈடுபடுதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.வெள்ளிக்கிழமை (20)மாலை 6.00மணிக்கு ஆரம்பமான இந்த ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை (23)காலை 6.00மணி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் 300ற்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் .எனவே சட்டத்தை மதித்து நடக்க வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாக உள்ளது.