மகிழ்ச்சி எனும் அதிசயப் பூ ; உலக மகிழ்ச்சி தின சிறப்புக் கட்டுரை - அப்ரா அன்ஸார்

Rihmy Hakeem
By -
0
மகிழ்ச்சி எனும் அதிசயப் பூ- மார்ச் 20 உலக மகிழ்ச்சி தினம்.

அணியும் பொன் ஆபரணங்களை விடவும் அழகானது நம் முகம் சிந்தும் இனிமையான புன்னகையாகும்.மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நம் வாழ்நாளை வெகுவாக நீடிக்கிறது.ஒவ்வொரு விடியலிலும் மகிழ்வலைகள் நம்முள் எழுவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தால் வெறுப்பை மறுத்து சிரிப்பை நம் உள்ளத்திற்குள் ஊற்ற வேண்டும்.ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்பவனுக்கு அவன் மனம் அருவிபோல் பொங்கத்தான் செய்யும் அந்தந்த கணத்தை அனுபவித்து வாழ்பவனுக்கு எல்லா வினாடிகளும் அருமையானதுதான்.வளர்ந்த செடியால் தொட்டியையும் துளைத்துக் கொண்டு மண்ணில் வேர் பரப்ப முடிகிறது.சென்டிமீட்டர்களால் வளர்ந்ததாய் காட்டிக் கொண்டிருக்கும் நம்மால் அவ்வாறு ஏன் முடியவில்லை ?வேதனைப் பரப்பில் நம் வேர்களைப் படரவிட்டு வருத்தத்தின் நிறுத்தத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.நமக்கு நடக்கின்ற எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே தான் பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான் .தேனடையில் தேனீ சேர்த்து வைத்திருக்கும் தேனைத் தன் கரங்களால் பிழிந்தெடுக்க முடிந்த மனிதனால் எவ்வாறு மலர்களுக்கு வலிக்காமல் தேனை சேகரிப்பது என்ற இரகசியத்தை மட்டும் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை.சந்தோஷம் என்பது வெளியில் இல்லை அவை உணர்வில் கலந்தது.

பிறந்தகுழந்தையின் பிஞ்சுப்பாதம்,இளங்காலைப் பொழுதின் இனிய தென்றல் ,ஆலம் விழுதுகளில் ஆடிய ஆட்டம்,கால்நுனி நனைக்கும் கடலலை நுரை,பேருந்துப் பயணத்தில் வழியும் இசை,தேடிவந்து காது நிறைக்கும் நண்பர்களின் இனிய பேச்சு ,பதறிச் செய்யாத நல்ல காரியம்,நதிப்புனல் குளியல் என இன்பமாய் ,ஏன் துன்ப பயம்?நம்மை வேறுயாரும் ஊக்கப்படுத்தாவிட்டால் பரவாயில்லை நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வோம்.உலகில் நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொண்டவர்களால் மட்டுமே தடைகளை உடைத்தெறிய முடிகின்றது.மகிழ்ச்சியின் திசைநோக்கி நம்மைத் திருப்பிக் காெள்வோம்.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கேட்டுக்கொள்வோம்.


மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தை கூறுவார்கள்.போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டு வருவதே மகிழ்ச்சி என ஐநா.சபை  கருதுகிறது.மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை இலட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா பொதுச்சபை 2012 ம் ஆண்டு ஜுலை 12மார்ச் 20ஆம் திகதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.மகிழ்ச்சியை அதிகப்படுத்த விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஐந்து வழிகள் பின்வருமாறு,

வெளியிடங்களுக்குச் செல்லல்:வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை விட வெளியே செல்வதால் சுற்றுச் சூழலில் இயல்பாகவே உள்ள இதமான காற்று விட்டமின் Dயை தரும் சூரிய வெளிச்சம் மற்றும் பறவைகளின் ரீங்காரம்,எதிர்பாராத எப்போதும் சந்தோஷமாக இருக்கும் நபர்களின் சந்திப்பு என்பன போன்ற பல நிகழ்ச்சிகள் நமது மனதைக் கவர்ந்து மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.இரண்டாவது ,தினசரி குறைந்தது 15நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதே அந்நாள் முழுவதும் சக்தியம் ,உற்சாகமும் மிக்க நபராகச் செயற்படவும் நேர்மறையாக சிந்திக்கவும் உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும் உடலுக்கு நாம் கொடுக்கும் பயிற்சி உடலில் நோய்க் கிருமிகளை எதிர்த்து சண்டையிடும் புரதங்களான ஆண்டிபொடீஸ்ஜயும் ,மனநிலையை தீர்மானிக்கும் மூளையில் இருந்து வெளியாகும் எண்டோர் ஃபின்ஸ் என்ற ஹோமோனையும் அதிகம் உற்பத்தி செய்யும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது தேவைக்கு ஏற்ற உறக்கம்.உடலில் அழுத்தம் எனப்படும் அசதியை அதிகம் ஏற்படுத்துவது தூக்கம் இன்மையே,நம்மில் பலர் அதிகமாக வேலை செய்து குறைவான நேரமே தூங்குவதால் அவர்களுக்கு அதிகபட்ச அழுத்தமும்,எதிர்மறை சிந்தனையும் ஏற்படுவதால் கணிக்கப்பட்டுள்ளது.மனதுக்கு பிடித்த பாடல்களை வெட்கத்தை முனங்குங்கள்.நம்மில் பலருக்கு பாடல்களை ரசிக்க பிடிக்கும் ஆனால் பாடமாட்டோம் .விஞ்ஞானிகள் சொல்வது என்னவென்றால் எப்போதெல்லாம் சிறிது ஓய்வு கிடைக்கின்றதோ அப்போதல்லாம் வானொலி மற்றும் ஒலி அமைவு பாடல்களின் சத்தத்தை சற்று அதிகரித்து அந்த இசையுடன் சேர்ந்து பாடுங்கள் என்கிறார்கள்.ஐந்தாவது,மோசமான அனுபவங்களை மனதில் இருந்து விலக்கி வையுங்கள் .உங்கள் வாழ்வில் மோசமான கட்டங்களும் அனுபவங்களும் அவ்வப்போது வருவது வழக்கம்.அப்போதெல்லாம் அதைக் குறித்து வைத்து விட்டு மனதில் இருந்து அதை விலக்கி வைக்குமாறு அல்லது குறித்த அனுபவத்தின் பின் வீடு சென்று பிடித்தமான புத்தகம் வாசித்தல் அல்லது பிடித்தமான செயல் எதிலும் ஈடுபடுதல் மூலம் மனதை திசை திருப்பி மகிழ்ச்சியை தரும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.வாழ்வின் போக்கிலே வருடும் மகிழ்ச்சியை விடாமல் பிடித்தால் உன்னதம் மலரும் மகிழ்ச்சி தொடரும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)