கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள இரண்டு நோயாளர்கள் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.