இரண்டு இலங்கையர்கள் மிகத்தந்திரமாக தங்களது நோயை மறைத்து இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.

Rihmy Hakeem
By -
0

“அவர்கள் இத்தாலியிடம் பொய் சொன்னார்கள், இங்கே எங்களிடமும் பொய் சொன்னார்கள். இப்போது இவர்களால் கண்டக்குடா முகாமில் உள்ள மற்றவர்களும் ஆபத்தில் இருக்கிறார்கள்”

~அனில் ஜயசிங்ஹ- சுகாதார அத்தியட்சகர்~

இது என்ன கதையென்றால் ...

இத்தாலியில் இருக்கும் போதே கொரோனா தொற்றுக்கு ஆளாகிய இரண்டு இலங்கையர்கள் மிகத்தந்திரமாக தங்களது நோயை மறைத்து இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.

அவர்கள் வழமையான மிலான் விமான நிலையத்தினூடாக தங்களது பயணத்தை மேற்கொள்ளாமல் இத்தாலியின் வேறொரு remote airport இனூடாக அங்கிருந்து தப்பி வந்திருக்கிறார்கள். இதன் போது தங்களுக்கிருந்த காய்ச்சலை மறைக்க பரசிடமோலை பயன்படுத்தியுள்ளனர்.

இவர்கள் கண்டக்குடா முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த போது தொற்று இனங்கானப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக மற்றவர்களும் ஆபத்தில் உள்ளனர் என்கிறார் இலங்கையின் சுகாதாரப்பணிப்பாளர்!

இவர்கள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது மற்றவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளனர்.

மேலும் முகாம்களுக்குள் செல்லாது மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போதும் ராணுவத்தினருக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் மிக நெருக்கமாக காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார பணிப்பாளர் இன்றைய (14) ஊடக நிகழ்வில் கூறினார்!


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)