தேசிய பூங்கா - மிருகக்காட்சி சாலைகள் மூடப்படுகின்றன

Rihmy Hakeem
By -
0


வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சுக்கு உட்பட்ட தேசிய பூங்கா மற்றும் மிருககாட்சி சாலைகள் எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படமாட்டாதென வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சின் செயலாளர் சரத் விஜேசிங்க அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தேசிய வனவிலங்கு திணைக்களம் தாவரவியல் பூங்கா திணைக்களம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம் போன்ற நிறுவனங்களுக்கு உட்பட்ட தேசிய பூங்கா மற்றும் மிருககாட்சி சாலைகள் ஆகிய நிறுவனங்கள் எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)