அரசாங்கம் கொழும்பு மாவட்ட மக்களின் உணவுத்தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Rihmy Hakeem
By -
0

கொழும்பு மாவட்ட மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து வழங்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

(அப்ரா அன்ஸார்)


கோவிட் -19 வைரஸ் தொற்றின் காரணமாக முழு உலக நாடுகளும் சிக்கலான நிலையை எதிர் நோக்கியுள்ள நிலையில் நம் நாட்டிலும் இவ் வைரஸ் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

எனவே இந்நிலையில், இதனை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் வசிக்கின்ற மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்களாகவும், முச்சக்கர வண்டி ஓட்டுனர்களாகவும் இருக்கின்றனர்.

இந் நிலையில் இவர்களின் அன்றாட தேவைகள், குறிப்பாக உணவுத் தேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான தீர்வை உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அரசிற்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)