சவுதி அரேபியாவிற்குள் செல்லவும் அங்கிருந்து வௌியேறவும் தடை

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் (கொவிட் -19) உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவிற்குள் செல்லவும் அங்கிருந்து வௌியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் மேலும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு, தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,630 பேர் பலியாகி உள்ளனர். 1 இலட்சத்து 26 ஆயிரத்து 136 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் இதுவரை 45 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)