மனிதன் வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் செய்யும் அனைத்து பாவங்களை அறிபவனும், தன் தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனும் இறைவன்தான்.
மனிதன் பிறப்பால் பாவி அல்ல. இருந்தும் பாவம் செய்யும் தன்மை உள்ளவனாக இருக்கின்றான். இயல்பாகவே பாவத்தில் ஈடுபடவும் செய்கின்றான். இவ்வாறு மனிதன் செய்யும் பாவத்திற்கு மன்னிப்பு பெற இஸ்லாம் வழி வகுத்துள்ளது.
இறைவனால் கடமையாக்கப்பட்டதை நிறைவேற்றாமல் இருப்பதும் பாவமாகும். அதனை வேண்டா வெறுப்பாக நிறைவேற்றுவதும் பாவமாகும், இறைவன் தடுத்திருக்கும் விஷயங்களில் ஈடுபடுவதும் பாவமாகும்.
இவ்வாறு மனிதன் அறிந்தும் அறியாமலும், மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு பாவங்களில் ஈடுபடுகின்றான். இறைவனோ, மன்னிக்கும் மாண்புடையவனாக, பாவம் செய்தவர்கள் தன்னிடம் மன்னிப்புக் கோரும்படி கூறுகின்றான்.
மன்னிப்பதாக வாக்கும் அளிக்கின்ன்றான்.
நிரந்தர பாவியாயினும் சரி, மன்னிப்பு கோரிய பின் மீண்டும் பாவத்தில் ஈடுபட்டவனாக இருப்பினும் சரி, நிராசையடையாமல் நம்பிக்கையுடன் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கோருவதற்கு ஒரு நிபந்தனையுண்டு. அதாவது, மனிதன் தன் தவறை உணர்ந்து, அதை விட்டு விலகி (திருந்தி) மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
மனிதனின் மரண தருவாயில் கேட்கபடும் எந்த மன்னிப்பும் ஏற்றுக்கொள்ள படமாட்டாது.
ஆகவே அல்லாஹ் எமக்கு தந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோரி வெற்றி பெறுவோம்.
எம்.ஆர்.எம்.ரமீஸ்