கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மாலம்பே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல் கொத்தலாவல வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
இவ்வாறு நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இதுவரை 300 க்கும் அதிகமானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 22 கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்களில் சுமார் 3063 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்களில் 31 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் சுகாதார பிரிவினர், உளவுத்துறையினர், இராணுவம், பொலிஸார், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்ட சுமார் பத்தாயிரம் பேரை சுய தனிமைப்படுத்தலை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல் நேற்று முதல் முதல் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை முழுமையாக கொரோனனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு முழுதும் 30 வைத்தியசாலைகள் வரையில் சிகிச்சையளிக்க தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சாதாரண வாட்டுகளில் 36 கட்டில்களும், அவசர சிகிச்சை பிரிவுகளில் 130 கட்டில்கள் வரையில் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வொயிஸ் அமெரிக்கா நிறுவனமும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இராணுவத்தால் மாற்றப்பட்டு வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
ஹோமாகம வைத்தியசாலையும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
நாட்டில் இனம் காணப்பட்டுள்ள 77 நோயாளர்களில் 69 பேர் தற்சமயம் ஐ.டி.எச் மருத்து மனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நால்வர் அநுராதபுரம் வைத்தியசாலையிலும். மூவர் வெலிகந்த ஆதார வைத்தியசலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 48 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.
(அததெரண)