அர்ப்பணிக்கும் ஆன்மா...! - மகளிர் தின வாழ்த்து

  Fayasa Fasil
By -
0



    உன்னைப்போல் யாரும் இருக்கப்போவதில்லை என்று நிச்சயமாய் தெரிகிறது. உனக்கு நீ தான் நிகர். யாரென்று பார்க்கிறீர்களா.. ? வேறு யாருமல்ல. நீ தான்.  பெண் குழந்தையாய் பிறந்து தனது பெற்றோருக்கு தேவதையாய் மிளிர்கிறாய்...  படிப்படியாக வளர்ந்து, ஆளாகி பெரியவள் என்கிற பட்டத்தை தெரியாமலே உன் மீது சுமத்துகிறார்கள்.. உன்னை திருமணம் என்கிற பந்தத்தில் இணைக்கிறார்கள்...  வாழ்க்கைப்பயணத்தில் ஓடிக் களைக்கும் முன்னே தாய் எனும் ஸ்தானத்தை அடைந்து கொள்கிறாய்.. !!!
தனக்கான கனவுப் புத்தகத்தை மூடி வைத்து பிறருக்காய்  உன்னை நீயே இழந்து கொண்டிருக்கிறாய்.. புன்னகை சிந்தி பொறுமை எனும் நகை அணிந்து கொண்ட பெண்ணே...
காலத்தால் அழியாத பல வரலாற்று நிகவுகளை தன்னகத்தே கொண்ட பிறவி நீ..
தங்கையாய்...
தாரமாய்...
தாயாய்...
பல பாத்திரம் படைக்கும் சகலகலா வள்ளி நீ ... காயத்திற்கு மருந்திடும் வைத்தியராய்... கற்பிக்கும் ஆசானாய்...சமையல்காரியாய்... துணி துவைப்பவளாய்..நேரத்தினோடு சண்டை செய்யும் ஒற்றைப் பம்பரம் நீ...
உன் நேரத்திற்கு  பங்காளி நீ...
புது உலகின்   நவீனம் நீ...
மொத்தத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண் நீ...

அர்ப்பணிப்புக்கள்  புரியும் அனைத்து மகளிர்க்கும் சமர்ப்பணம்.
வாழ்க பெண்மை
மகளிர் தின வாழ்த்துக்கள்
Fayasa Fasil
Kahatowita

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)