பொதுத்தேர்தலில் தனித்தா? கூட்டணியிலா? - சுதந்திரக் கட்சி நாளை முக்கிய தீர்மானம்

Rihmy Hakeem
By -
0

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க கூட்டம் ஒன்று நாளைய தினம் (10) இடம்பெறவுள்ளது. நாளைய தினம் கட்சியின் சகல தேர்தல் தொகுதி அமைப்பாளர்களும் கொழும்பில் ஒன்று கூடவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்தா? அல்லது கூட்டமைப்பொன்றுடன் இணைந்தா? போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் குறித்த கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய தினம் அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்யக்கூடும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)