இந்த நன்கொடைகள் 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஏ.பி விக்ரமசேகர அவர்களது தலைமையில் கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. வெலிஓயவிலுள்ள எதாவெடுனவேவ சமூக நலன்புரி மண்டபத்தில் இந்த நன்கொடை வழங்கி வைக்கும் நிகழ்வானது இம் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கொழும்பு ரொட்டரி கழகத்தின் தலைவர் கயான் சமரவீர, வெலிஓய பகுதியைச் சேர்ந்த புதிய மின்னணு கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானி மற்றும் ரொட்டரி கழகத்தின் உறுப்பினரான டொக்டர் அநுர ரத்னாயக, 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஏ.பி விக்ரமசேகர, 14 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

