தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை - சஜித்

Rihmy Hakeem
By -
0
நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முறையாக கையால்வது என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், சமகி ஜனபலவேகயவின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மொட்டு கட்சியினர் போன்று பொய்களை கூறும் ஒருவர் நான் அல்ல.

கொரோனா வைரஸால் சர்வதேசத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை.

நிதி பொருளாதார கொள்கை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித புரிதலும் இல்லை. அதனால் பொருளாதாரத்திற்கு முகம் கொடுக்க அவர்கள் தடுமாறுகின்றனர்.

அதன் காரணமாகவே அரசாங்கம் தற்போது சிதைவடைந்த ஒரு பொருளாதார கொள்கையை கைக்கொள்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)