ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் மெனிங் சந்தையை திறந்து வைக்க தீர்மானம்

Rihmy Hakeem
By -
0


ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நாட்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை புறக்கோட்டை மெனிங் சந்தையை திறந்து வைப்பதற்கு அதன் வர்த்தக் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று மரக்கறி வகைகளை ஏற்றிய 15 லொறிகள் மெனிங் சந்தைக்கு வந்ததாக சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

மக்களுக்குத் தேவையான மரக்கறி வகைகளை பிரதேச மட்டத்தில் விநியோகிக்கத் தேவையான மரக்கறி வகைகள் போதியளவில் காணப்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)