ஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு பிணை

Rihmy Hakeem
By -
0
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இருந்தனர்.

அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி காலை ஆஜராகி இருந்தனர்.

இதனை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை இன்று (04) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

adaderana

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)