பகிடிவதைக்கு உள்ளான நிலையில் காயமடைந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குமார விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழு விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 5ம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த பல்கலைக்கழகத்தின் 1 ஆம் வருட மாணவனின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

