இலங்கையில், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக போராடும் ஊடக கல்வியறிவை ஊக்குவிக்கும் முகமாக இளம் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று (03) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
"போலி செய்தி உலகத்திற்கான சரியான ஊடக கல்வியறிவு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த செயலமர்வானது SDJF இனால் ஏற்பாடு செய்யபட்டிருந்ததுடன், ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் (CMIL) மற்றும் NewseumED என்பனவும் அனுசரணை வழங்கியிருந்தன.
இந்நிகழ்வில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் உள்நாடு மட்டும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த செயலமர்வில் அமெரிக்க ஊடகவியலாளரான Jessi Hollis McCarthy அவர்கள் விரிவுரையாற்றினார்.
(அப்ரா அன்ஸார்)







