எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அக்கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களது கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் இக்கூட்டணி மொட்டு சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கூட்டணியிலுள்ள கட்சிகளுடன் இணைந்து இன்னொரு சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவருகின்றது.