ZNF அமைப்பின் ரமழான் திட்டத்தில் மாறுதல்கள்

Rihmy Hakeem
By -
0

எமது ZNF அமைப்பினூடாக புனித ரமழானை முன்னிட்டு நாம் பல்வேறு விதமான சமூகநல திட்டங்களை வகுத்திருந்தோம்.

எனினும் இன்றைய உலகளாவிய மற்றும் இலங்கை சூழலை கருத்தில் கொண்டு ரமழான் திட்டத்தில் பல மாறுதல்களை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

ZNF இன் இப்தார் நிகழ்வுகள் தற்போதைய நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இவ்விடயத்தில் தொண்டர்கள் பொறுத்தருள வேண்டுகிறோம்.

உணவுப் பொதிகள் வழங்குவது பற்றி ஆராய்ந்து கொண்டுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் அது தொடர்பில் எமது உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு காலகிரமத்தில் அறிவிப்போம்.

எந்த அவசர நிலமையிலும்  முடிந்தளவு, எம்மாலான  பணிகளை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸைத்தூன் நஹார்,
ZNF (HELPING HANDS)                                             🇨🇦 CANADA 🇨🇦

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)