கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த ஐந்தாவது நோயாளி வேறு எந்த நோயாலும் பீடிக்கப்பட்டிருக்கவில்லை என, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நபர் இத்தாலியிலிருந்து வருகைதந்ததையடுத்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி, வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் 26 ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவந்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் மிரர்

