தனிமைப்படுத்தல் கண்காணிப்பு செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ளாதிருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனூடாக தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பொய்யான பிரசாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான உண்மைக்குப்புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக பரப்பிய பெண் ஒருவர் வாத்துவ பிரதேசத்தில் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம்