எமது 24 மணிநேர வாழ்க்கையும் வணக்கம் எனும் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. சமைப்பது, சாப்பிடுவது, உறங்குவது, உறங்கி எழுவது, சிறிப்பது, கதைப்பது, கற்பது, கற்பிப்பது, உழைப்பது, உதவுவது இப்படி அன்றாடம் செய்யும் அனைத்து கருமங்களும் அதன் முறைக்கு ஏற்றவாரு செய்யப்படும்போது அது வணக்கமாகிறது.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளிலும் எத்தனை கருமங்களை செய்கிறோம்.
நாம் சந்தித்த ஒவ்வொரு நாளிலும் எத்தனை கருமங்களை செய்திருப்போம். கற்பனையால்கூட கணக்கிடமுடியாத கரமங்கள் எம் வாழ்வில் செய்யப்பட்டிக்கலாம்.
இங்கு முன்வைக்கப்படவேண்டிய முக்கியமான வினா எதுவெனில்...
நாம் இப்போது செய்கின்ற கருமங்களை வணக்கம் என்ற தெளிவான சிந்தனையுடன் செய்கிறோமா?
இதற்கு முன் செய்த கருமங்களை வணக்கம் என்ற தெளிவான சிந்தனையுடன் செய்தோமா? அல்லது
வெறுமனே பழக்கமாக செய்து வருகிறோமா?
பழக்கமாக செய்யும் எதுவம் வணக்கமாகாது. நன்மையும் கிடைக்காது.
நாம் செய்யும் எல்லா கருமங்களையும் வணக்கமாகவும் நன்மைகளும் நல்ல வெகுமதிகளும் கிடைக்கும் என்ற நோக்கிலும் செய்தால் எங்கள் வீட்டை வணக்கத்தின் கோட்டையாக மாற்றி அமைக்கலாம். நன்மைகள் ஊற்றெடுக்கும் அருள் நதியாக ஆக்கிவிடலாம்.
எமது வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் கருமங்களை வணக்கமாகவும் நன்மைபெற வேண்டும் என்ற ஆசை ஆரவத்துடனும் செய்ய ஆரம்பித்தால் எம் ஒவ்வெருவரினதும் உள்ளம் எவ்வளவு அழகடையும். எவ்வளவு ஆரோக்கியம் பெரும்.
நாம் செய்யும் ஒவ்வொரு வேலையின் மீதும் அவதானம் செலுத்தி மனதை அதன்மீது முழுமையாக நிலைநிருத்தி செய்ய ஆரம்பிப்போம். முதலில் சின்ன விடயங்களை ஆசையாக செய்யத் தொடங்குவோம். நாம் செய்யும் அனைத்து நல்ல விடயங்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவற்றை செய்வோம்.
‘எனது வாழ்க்கையை வணக்கமாக ஆக்கிக்கொள்வதற்கான சக்தி எனக்குள்ளேயே இருக்கிறது’ என்ற பேருண்மையை உறுதியாக நம்புவோம்.
ஒவ்வொரு விடியலின்போதும் 24 மணித்தியாலங்களை கொண்ட ஒரு புத்தகம் தூய பரிசாக எமக்குக் கிடைக்கிறது.
நல்ல கருமங்களால், மனஅமைதி தரும் விடயங்களால் அந்த புத்தகத்தை நிரப்பிக்கொள்வோம்.
உற்பத்தி நிறைந்த நாளாக எமது நாளை மாற்றி அமைப்போம்.
ஒவ்வொரு நாளும் 24 மணித்தியாளங்களை முழுமையாக பயன்படுத்துவதன் முலம் மிகச்சிறந்த வாழ்க்கையை உருவாக்க முடியும்.
குடும்பமாக வீட்டோடு இருக்கும் இக்காலத்தில் நல்ல கருமங்கள் செய்து ஒவ்வொருவரும் தன்னை நடத்தைகளால் அழகாக்கி எமது வீட்டை நல்ல மனிதர்கள் வாழும் இடமாக மாற்றியமைப்போம்.
-------- ------- -------- --------
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்