சென்ற வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் அண்மையில் ஒருவர் கைதாகியிருந்ததுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

