தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நடுத்தர, கீழ்மட்ட குடும்பங்களுக்கு 20,000 வழங்க நடவடிக்கை - சஜித்

Rihmy Hakeem
By -
0

தற்போதைய அரசாங்கம் வேலை செய்ய திராணியற்ற அரசாங்கம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அதன் நன்மைகளை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நடுத்தர குடும்பங்களுக்கும் அதற்கு கீழ் மட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கும் 20,000 ரூபா நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)