ஜிந்துபிட்டி நபருக்கு கொரோனா இல்லை ; தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட 154 பேரை திருப்பியனுப்ப நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

கடந்த 2ஆம் திகதி இரவு கொழும்பு 13, கொட்டாஞ்சேனை- ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொ​ரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபருக்கு, 5 த​டவைகள் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய, அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளாரென, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜிந்துப்பிட்டி பகுதியிலிருந்து கந்தகாடு முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட 154 பேரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவத்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)