இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராக குயிண்டன் டி கொக் தெரிவு!

www.paewai.com
By -
0

தென் ஆபிரிக்க கிரிக்கெட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராகவும், சிறந்த டெஸ்ட் வீரராகவும் குயிண்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபையால் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விழா கொரோனா வைரஸ் தொற்றால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.

ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவன் டி கொக் சிறந்த வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டில் 21 வயதாக லாரா வால்வார்த்ட் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டி கொக் 2-வது முறையாக சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இதற்கு முன் கலிஸ் (2004, 2011), நிட்னி (2005, 2006), அம்லா (2010, 2013), டி வில்லியர்ஸ் (2014, 2015), ரபாடா (2016, 2018) ஆகியோர் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)