தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடம் என்று கூறி மட்டக்களப்பில் விகாரை அமைக்க முயற்சி ; பிரதேசத்தில் பதற்றம்

Rihmy Hakeem
By -
0

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளி பிரதேசத்தில் இன்றைய தினம் (05) அம்பிட்டிய சுமண தேரர் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட பிரதேசம் தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடமாக கூறி விகாரை அமைக்க வேண்டும் என்று அங்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகளுடன் விஜயம் செய்ததால் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சாணக்கியன் உட்பட அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பினால் தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)