கஹட்டோவிட்ட கிராமத்தில் உள்ள பல பாதைகளின் காணப்படும் மின்கம்பங்களில் உள்ள சுமார் 50இற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் அத்தனகல்ல பிரதேச சபையினால் இன்றைய தினம் (06) திருத்தப்பட்டன.
கஹட்டோவிட்டாவிலுள்ள பிரதான பாதை மற்றும் உள்ளூர் பாதைகள் பாடசாலை வீதிகள்,குறுக்குப்பாதைகள் என்று பல பாதைகளிலும் வீதி மின்விளக்குகள் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த பழுதடைந்த மின்விளக்குகளை திருத்தியமைத்து தருமாறும்,ஊரில் குப்பை கூழங்களை முன்பு போல் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,நீர்த்தேக்கம் அடைந்து அசுத்தமான நிலையில் காணப்படும் போக்குகள் போன்றவற்றை சுத்தப்படுத்தி தருமாறும் வேண்டி கஹட்டோவிட்டாவில் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் நஜீம் அவர்களின் வீட்டில் அத்தனகல்ல பிரதி தலைவரும் அலுவல் பார்க்கும் அதிகாரியுமான கௌரவ நீல் ரூபசிங்ஹ அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்து கஹட்டோவிட்ட கிராம அபிவிருத்தி மற்றும் 369ஏ பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களினால் ஊர்மக்கள் சார்பில் மேற்படி அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தருமாறு ஒரு வேண்டுகோள் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில் வேண்டிக்கொண்ட பிரகாரம் கடந்த முதலாம் திகதி முதல் ஊரில் கழிவகற்றும் வாகனங்கள் (ட்ரக்டர்)முன்பு போல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் அதன் தொடர் அம்சமாக இன்றைய தினத்தில் மேற்படி ஊரின் ஐம்பதுக்கு மேற்பட்ட மின்கம்பங்களில் காணப்பட்ட பழுதடைந்த மின்விளக்குகளை திருத்தியமைத்து அதனை ஒளிரச்செய்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ்
கஹட்டோவிட்ட கிராம அபிவிருத்தி மற்றும் 369ஏ கிராம பாதுகாப்பு சங்கத்தின் தலைவர்
நன்றி - Kahatowita News Page Official