பொதுத் தேர்தல் நிறைவுற்றதும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணித்து மக்களுக்கு கையளிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாச தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருகோணமலை பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், திருகோணமலை மக்களை நான் நன்கு அறிவேன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தொகுதி மக்கள் தேசிய ரீதியிலும் பார்க்க அமோக வாக்குகளை எனக்களித்தீர்கள்.
இம் முறையும் அதே போன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்துங்கள். பல விதமான பிரச்சினைகள் இங்கு உள்ளன. இன மதவாதமற்ற சேவையை மூவின மக்களுக்கும் சமமான முறையில் செய்து காட்டுவேன்.
மீனவர்கள் பிரச்சினை,விவசாய நிலங்கள் தொடர்பிலும் பல சாதகமான முறையில் சேவைகளை செய்வதற்காக எண்ணியுள்ளேன். இந்த நாட்டில் சிறுபான்மை என்று ஒன்றில்லை. எல்லோரும் சமமாக வாழ வழிவகுக்க இந்த நாளில் எனது சக்தி ஊடாக முன்னெடுக்க காத்திருக்கிறேன் என்றார்.
(தினகரன்)