இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:
வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு (மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு, இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது.
இதே போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.