டுபாய் அரச பேரூந்துகளில் முதல் முறையாக பெண் சாரதிகள் அறிமுகம்

www.paewai.com
By -
0

டுபாய் அரச பேரூந்துகளில் முதல் முறையாக பெண் சாரதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

டுபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையகத்தின் அரசு போக்குவரத்து முகவர் நிலையத்தின் பொது இயக்குனர் அகமது காசிம் பக்ரூசியான் கூறியதாவது:-

டுபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையகம் போக்குவரத்து சேவையில் பல்வேறு வகையான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண் பேரூந்து சாரதிகள் கடந்த 3-ம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். முதல் முறையாக 3 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பகுதியில் முதல் முறையாக டுபாய் நகரில் பெண் பேரூந்து சாரதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிறப்பான முறையில் தங்களது பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் போதிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பாதுகாப்பான வகையில் தங்களது பணிகளை அவர்கள் மேற்கொள்ள உதவியாக இருந்து வருகிறது. பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.' என்றார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)