கைதிகளை பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை

www.paewai.com
By -
0

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக் கைதிகளை அவர்களின உறவினர்கள் பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெணிய இதனை தெரிவித்துள்ளார்.

​வெலிக்கடை சிறைச்சாலையின் கைதியொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிகடை சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடுவதற்கு நேற்று (07) முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுப்பப்பட்டு பின்னர் ஜூன் 26 ஆம் திகதி பொலன்னறுவை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த கைதி ஜூன் 27 ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பரிசோதனைகளுக்கு கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)