ரூபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த முதல் 2 நாடுகளில் இலங்கை!

www.paewai.com
By -
0

இலங்கையும், மாலைதீவும் ரூபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த நாடுகள் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளது.

2023ஆம் ஆண்டக்கு முன்னர் சின்னம்மை, ரூபெல்லா ஆகிய நோய்களை இல்லாதொழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்காசிய பிராந்தியத்தில், குறித்த இலக்கிற்கு முன்னதாக இரு நோய்களையும் இல்லாதொழித்த நாடுகள் என்ற பெருமை இலங்கைக்கும், மாலைதீவிற்கும் கிடைத்துள்ளது.

இது பிள்ளைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் மிகவும் முக்கியமான நடவடிக்கை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான மேலதிகாரி டொக்டர் பூணன் கேத்திரபால் சிங் தெரிவித்தார். அவர் இலங்கைக்கும், மாலைதீவிற்கும் வாழ்த்துகளையும் கூறினார்.

மூன்று வருடங்களினுள் ரூபெல்லா அல்லது அம்மை நோயாளர் ஒருவரேனும் இனங்காணப்படாவிட்டால் குறித்த நாடு குறித்த நோய்கள் இரண்டையும் ஒழித்த நாடாக உலக சுகாதார அமைப்பால் பிரகடனப்படுத்தப்படும்.

மாலைத்தீவில் இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு அம்மை நோயாளர் ஒருவர் பதிவாகியிருந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூபெல்லா நோயாளர் ஒருவர் பதிவாகியிருந்தார். இதேவேளை, இலங்கையினுள் கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியான அம்மை நோயாளர் பதிவான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூபெல்லா நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)