3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மாதம் இறுதியில் இங்கிலாந்துக்கு சென்றது. வொர்செஸ்டரில் உள்ள ஓட்டலில் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் பாகிஸ்தான் அணியினர் அருகில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவ்விரு அணிகள் இடையிலான போட்டி தொடர் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இரசிகர்கள் இன்றி மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் போட்டி நடைபெறும் திகதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டிக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் ஓகஸ்ட் 5-ம் திகதியும், 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் முறையே ஓகஸ்ட் 13 மற்றும் 21-ம் திகதியும் தொடங்குகிறது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மான்செஸ்டரில் முறையே ஓகஸ்ட் 28-ம் திகதிஇ ஓகஸ்ட் 30-ம் திகதி மற்றும் செப்டம்பர் 1-ம் திகதிகளில் நடக்கிறது.
இந்த போட்டி தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி சவுதம்டனில் வருகிற 30-ம் திகதி முதல் ஓகஸ்ட் 4-ம் திகதி வரை நடக்க இருக்கிறது.