கட்சித் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மேலும் தெரிவித்த அவர், 19ஆவது திருத்தத்தில் இருந்து அல்லாமல் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒவ்வொரு பகுதியை இணைக்காமல், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உறுதியான அதிகாரம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால், அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது ஒவ்வொருவரின் பணயக் கைதிகளாக வேண்டிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, சோபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச ஒப்பந்தங்களை உடனடியாக நிராகரிக்க முடியாது என்றும் அது குறித்து ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.