மக்கள் விடுதலை முன்னணியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கௌரவ இன்சாப் அவர்களது வேண்டுகோளினையடுத்து, அக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களது சம்பளத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 50 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிளாஸ்டிக் கதிரைகளை கஹட்டோவிட்ட, ஓகொடபொல பிரதேச மக்களது வைபவங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.