கொவிட்-19 தொற்றுப்பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக மருத்துவ சாதனங்களை பெற்றுக் கொள்ள 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் 2020 ஜுலை 8ஆம் திகதி இடம்பெற்றது.