இன்று முதல் விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்

www.paewai.com
By -
0

விபத்து தடுப்பு வாரம் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றது.

இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விபத்து தடுப்பு வாரம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் வீதிப் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் விபத்துகளை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இரவு நேரங்களிலும் சோதனைகளில் ஈடுபட்டதாக பொலிஸ் வீதி போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 51,550 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)