தேசியப்பட்டியலுக்கான ஞானசார தேரருக்கும் ரத்தன தேரருக்கும் இடையில் இடம்பெரும் இழுபரியில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் தலைமறைவாகியுள்ளார்.
2001 இலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. சிஹல உருமய முதன்முறையாக போட்டியிட்ட தேர்தல் அது. பெரிய எதிர்ப்பார்ப்புக்களுடன் கலத்தில் குதித்த்து. ஆனால் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது. அதுவரை ஒற்றுமையாக இருந்த கட்சி பின்னர் தேசியப்பட்டியலுக்காக அடித்துக் கொண்டது. கடைசியில் கட்சியின் பொதுச் செயலாளர் திலக் கருனாரத்ன தனது சொந்த முடிவில் தனது பெயரை பரிந்துரை செய்து பாராளுமன்ற உருப்பினரானார். கட்சியின் தலைவர் SL குனசேகர அழுது கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது இன்றும் எனது கண்ணை விட்டு மறையவில்லை.
பின்னர் சிஹல உருமய கட்சி சுக்கு நூராக உடைந்து பாட்டலி மற்றும் கம்மன்பிலவின் முயற்சியில் ஹெல உருமய என்ற பெயரில் உயிர் பெற்றது.
(ஸஹ்ரான் கரீம்)